காதலின் மீதியோ நீ-25

காதலின் மீதியோ நீ-25

காதலின் மீதியோ நீ-25

நித்ரா இப்பொழுது நேராக எங்கு போகிறது என்று தெரியாமல் நடந்தால் அவளுக்கு கால் வலிக்கவும் அங்கே அருகில் இருந்த ஒரு பார்க்கில் போய் உட்கார்ந்தாள்.

அவள் அங்கு உட்கார்ந்தது தான் தாமதம் அவளது இதயம் விம்மி வெடித்து அழுதது.

அவளது மனதோ பாரம் தாங்காது வேதனையைக் கண்ணீர் வழியாக வெளியே கொட்டியது. இப்போது அவளருகில் யாரோ வந்து உட்காரவும் நிமிர்ந்துப் பார்த்தாள் ஆயுஷ் உட்கார்ந்திருந்தான்.

“ஏன் என்னைப் பின்தொடர்ந்து வந்திட்டிருக்க? உனக்கு தான் சொந்தமா கம்பெனி இருக்குதே நீ எதுக்கு அதெல்லாம் விட்டுட்டு இங்க ஒரு வேலைக்காரன மாதிரி வேலைக்கு வந்து உட்கார்ந்து இருக்க? இத பாத்தா நான் சந்தோஷப்படுவேன்னு நினைக்கிறியா? சத்தியமா இல்ல என்னாலயும் என்னுடைய காதலாலயும் உன்னை நான் எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன் பாருன்னு சொல்லி அழத்தான் தோணுது ஜீஜூ. சத்யமா என்னால முடியல உன்னை இப்படிப் பார்க்க? ப்ளீஸ் இங்கிருந்தும் என்னை விட்டுட்டும் போயிடு. உன் சட்டைக்காலரும் மடிப்பு கூட கலையாது இருந்தவன் இப்போ இங்கே வந்து ஒரு சாதாரண சம்பளம் வாங்கும் வேலைக்காரனா உன்னை பார்க்கப்பிடிக்கலை ஜீஜூ”என்று அழுதாள்.

“நீதான் என்னை விட்டுட்டு பிரிஞ்சு வந்துட்டியே அப்புறம் நான் எப்படி போனா உனக்கு என்ன? எங்க வேலை பார்த்தா உனக்கு என்ன? நீ உன் வாழ்க்கையைப் பாரு நான் என் வாழ்க்கை பார்க்கிறேன். எதுக்கு இப்போ என்னை போன்னு விரட்டுற? நான் இங்க இருக்கிறதுல உனக்கென்ன பிரச்சனை? உனக்குத்தான் நான் வேண்டாமே அப்படியே விட்று நித்துமா”என்றான்.

அதைக்கேட்டவளுக்கு கோபம்தான் வந்தது ”ஜீஜூ இப்போ எதுக்கு என் பின்னாடியே வந்த? நான் ஒன்னும் அப்படியே செத்துடமாட்டேன். என்கூட எல்லோரையும் கஷ்டப்படுத்திட்டுத்தான் சாவேன். போதுமா போ போய் அந்த புளிமூட்டை தீபாக்கூட பேசு போ”என்று எதுக்குக் கோபப்படுறோம் என்று தெரியாது கோபப்பட்டாள்.

“நான் யாருக்கிட்ட பேசினா உனக்கு என்ன? நீதான் மியூச்சுவல்ல எனக்கு விவாகரத்து தரப்போறியே! இன்னும் கொஞ்சம் நாளில் விவாகரத்தும் கிடைச்சிடும். அப்புறம் நான் யாருக்கூட பேசினா என்ன? யாரோட பழகினாலும் சரி, யார் கூட கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரி, யாரு கூடவாழ்ந்தாலும் சரி இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விசயம்தானே நித்துமா? நீ தானே அன்னைக்கு பெருசா டயலாக் எல்லாம் பேசிட்டு வந்த. நீ நல்லா இருக்கணும் நீ உங்க அப்பா பார்த்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ சந்தோஷமா இரு, உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்னுலாம் சொன்ன.அப்ப நான் சந்தோஷமா இருப்பது உனக்கு பிடிக்கலையா?” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

‘ஆமால்ல அவனுக்காகவும் எனக்காகவும்தானே சேர்த்து யோசிச்சு அவன்கிட்ட இருந்து பிரிஞ்சு வந்தோம். அவன் யார் கூட பேசினா என்ன யார் கூட பழகினா உனக்கென்ன.நான் சந்தோசமா இருக்கணும்னுதானே விலகி வந்த.அப்போ உனக்கு எதுக்கு கோபம் வருது?’என்று யோசித்தவள் பாவமாக அவனது முகத்தை நோக்கிப் பார்த்தாள்.

அவளது கையைப்பிடித்தான் வேண்டாம் பிடிக்காதே என்பதுபோல் தள்ளிவிட்டு எழுந்து போகநினைத்தாள்.

அவனோ மொத்தமாக அவளை வாரிச்சுருட்டி தனது மடியில் வைத்திருந்தான்.

“என்னை விடு ஜீஜூ. நான் எங்கேயாவது போறேன். நீ வந்து என்னைப் பார்க்கமுடியாத இடத்துக்குப் போறேன்”என்று அவனிடமிருந்து எழுந்தாள்.

அவனோ அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அவனது முகத்தைத் தாங்கிப் பிடித்தவள்”ஏன் என்மேல இவ்வளவு காதல் வைச்ச ஆயுஷ்? இந்தக் காதல்தானே உன்னை மொத்தமாக மாத்திடுச்சு. இப்போ பாரு உன் மேலே நான் உட்கார்ந்திருக்கேன். உன் சட்டையெல்லாம் கசங்கிடுச்சு.நீ அந்த ஸ்டேட்டஸ் சைக்கோவாவே மாறிடேன். எனக்கு அந்த ஆயுஷ்தான் வேணும். எப்பவும் கெத்தா இருக்கிற ஆயுஷ். அப்படியே மாறிடு என்கிட்ட இருந்து போயிடு.உன் கெத்தை எனக்காக விட்டு இறங்கி வரவேண்டாம்”என்று அவனைப் பார்த்து பாவமாகக் கெஞ்சினாள்.

“சரி பழைய ஆயுஷா ஸ்ட்டேட்டஸ் சைக்கோவா மாறிடுறேன். உனக்காக மாறிடுறேன்.அப்போ என்கூட வருவியா?”

“இல்லை வரமாட்டேன்”என்று தலையாட்டினாள்.

“அப்போ நானும் உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன். இங்கத்தான் இருப்பேன்”

“அதில் கோபப்பட்டவள்” இல்ல நீ போகணும்.எனக்காக நீ எல்லாம் விட்டு வரவேண்டாம்.உங்கப்பா அதே பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்து நம்மைப் பிரிக்கப் பார்ப்பாரு.இல்லையா என்னை மிரட்டுவாரு.என் குழந்தைக்கு ஆபத்து.என் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்”

“அது என் குழந்தையும்கூட அப்போ என் குழந்தையை எப்படி பாதுகாக்கனும்ன்னு எனக்குத் தெரியும்”

“நம்ம அன்னைக்கே இதுபத்தி பேசி மியூட்சுவல் டைவர்ஸ்க்கும் அப்பளை பண்ணிட்டோம் ஜீஜூ”

“அதெல்லாம் பேச்சில்ல இப்போ.என் குழந்தை எனக்கும் வேணும்,என் பொண்டாட்டி அவக்கூடத்தான் இருப்பேன்”

“எனக்கு குழந்தை மட்டும் போதும்”

“புருஷன் வேண்டாமா?”

“ஹ்ஊஹ்ம்”தலை வேணும் என்றும் வேண்டாம் என்று அங்குமிங்கும் அசைத்தாள்.

இப்போது அவளுக்குமே அவன் இல்லாது இருக்கமுடியாது என்ற நிலைதான். ஆனால் அவனுக்காக தன் காதலையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறாள். அதுதான் நித்ரா!

எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தவன் தனக்காக ஒரு மிடில்கிளாஸ் பையன் மாதிரி இறங்கிவந்து ஒரு சீஃப் இன்ஞ்சினியராக வேலைக்கு வந்திருக்கிறானே!

இவனுக்காக நான் என் ஆசையையும் காதலையும் தியாகம் பண்றதுல தப்பேயில்லை என்று அந்த நிமிடமும் நினைத்தாள்.

“நித்துமா சத்தியமா நீயில்லாமல் என்னால இருக்கமுடியல. தயவு செய்து என்னைப் புரிஞ்சிக்க. எனக்கு இந்த சொத்துப் பணம் இதெல்லாம் உனக்கு முன்பாகப் பெருசா தெரியலை. டாடிக்கூட சண்டைப்போட்டுட்டு உனக்காக வந்திருக்கேன். நமக்காக வந்திருக்கேன். நம்ம குழந்தையோடு நம்ம சந்தோசமாக இருக்க வந்திருக்கேன். இதைத்தான்டி எனக்கு எதுவுமே வேண்டாம்.தயவு செய்து வா நம்ம ஒன்னா வாழலாம்.நீயில்லாத இந்த வாழ்க்கை எனக்கு வெறுப்பா இருக்கு”என்று அவளது முகத்தை தன் பக்கமாகத் திருப்பிப் பேசிக்கொண்டிருந்தான்.

“ஏன் சண்டைப் போட்டுட்டு வந்த ஜீஜூ நீ அங்கயே இருத்திருக்கலாம். நீ உங்கப்பாகிட்ட சண்டைப்போட்டுட்டு வந்தாலும் அவருக்கு இருக்கு எல்லாத்தையும் வைச்சு இப்பவும் நம்மளை எப்படி பிரிக்கலாம்னுதான் நினைப்பாரு. உனக்குள்ள நான் இருக்கேன். எனக்குள்ள நீ இருக்கு இதுபோதும். ஒருத்தரையொருத்தர் வெறுக்கல, சண்டைப் போட்டுக்கல, ஒருத்தொரையொருத்தர் புரிஞ்சிருக்கோம். இதுபோதுமே ஜீஜூ.நீ உண்மையில வேறொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டக்கூட எனக்கு ஓகேதான்”என்று சொல்லும்போதே அவளது கண்களில் இருந்து அவளது உணர்வுகள் கண்ணீராகப் பேசியது.

அவளது கண்ணீரை தனது விரல்கள் கொண்டு துடைத்தவன்”எதுக்கு நித்துமா இவ்வளவு எனக்காக யோசிக்கிற?”

“நான்தானடா உனக்கா யோசிக்கணும்?”

“அப்போ ஏன் விட்டுட்டு போறதுலயே குறியா இருக்க. நானே எல்லாத்தையும் விட்டுட்டு வர்றேனே! நீயேன் வேண்டாம்னு ஒதுங்குற.இதுக்குமேல ஏதாவது பேசின வாயைக் கடிச்சு வைச்சிருவேன்”

“எங்கக் கடி பார்ப்போம்?” என்று அவனிடம் கோபம் காண்பித்தவளின் உள்மனம் ஏங்கும் ஆசை என்னவென்று அவனுக்குத் தெரியாதா?

அவளது உதடுகளைப் பிடித்து விரல்கொண்டு நசுக்கியவன்”இந்த உதடுதான என்னை வேண்டாம் வேண்டாம்னு ஒதுங்கிப் போகச்சொல்லுது. அதுக்கு தண்டனைக் குடுக்கணும்ல” என்றவன் தன் தலையை சரித்து அவளது உதடுகளைக் கவ்விப்பிடித்து வலிக்க இழுத்தான்.

தன்னை வேண்டாம் என்று விலக்கி வைக்கிறாள் என்ற கோபம் அவனுக்கு வந்தது. அதை அவளது இதழிலே வன்மையாக முத்தம் வைத்துக் காண்பித்தான்.

அவளது வயிற்றை அழுத்தாதவாறு முத்தம் வைத்துக்கொண்டிருந்தான்.

தனது உதட்டால் போ போ விலகிப்போ நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லபவளின் உள்ளமோ அவனது அருகாமையை அவ்வளவு யாசித்திருந்தது.

அது அவளது கண்களில் தெரிந்தது.அப்படியே அவனது முத்தத்தில் லயித்து தன்னை அவனுக்குக் கொடுத்து அப்படியே ஆயுஷின் தலையைப்பிடித்து வைத்துக்கொண்டாள்.

அவனும் அவளது கழுத்தைப் பிடித்து மெதுவாகத் தடவிக்கொடுத்தவாறே அந்த முத்தத்தில் ஆழ்ந்து ரசித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

மூன்றுமாதப் பிரிவுக்குப் பின்னாகக் கிடைக்கும் முத்தம் அவ்வளவு தித்திப்பாக நெஞ்சுக்குள் அடிவரை இனித்தது.

இனி பார்க்கவே முடியாதா என்றிருந்த நிலைமாறி அவனாகவே அவளுக்காகத் தன்னவளுக்காக எல்லாத்தையும் தூக்கியெறிந்து விட்டு வந்திருக்கான். அதற்கான சின்ன பரிசாக இந்த முத்தம் இருக்கட்டுமே என்று நினைத்தாளோ என்னவோ அத்தனை மெதுவாக அவனைத் தன்னுள் வாங்கி கண்கள் கிறங்க ரசித்துக்கொண்டிருந்தாள்!

இருவரும் முத்தம் தின்று காதலின் மீதியாக ஒருவரையொருவர் பார்வையாலே தின்றுக் கொண்டிருக்க இருவருக்குமே ஒருத்தரைவிட்டு ஒருத்தர் போகணுமே என்று அப்படியே உட்கார்ந்திருந்தனர்.

அப்போது நித்ரா போனுக்கு அழைப்பு வரவும் மனதேயில்லாமல் போனை எடுத்து காயில் வைக்க ”எருமை மாடே எங்கடிப்போன? உன்னைத்தேடி ஆயுஷ் வேற வந்தாரே? அவரையும் காணல.உன்னால் எல்லாருக்கும் வேதனைதான்”என்று திட்ட ஆரம்பித்துவிட்டாள்.

“எதுக்குக்கா திட்டுற நாங்க இங்க பக்கத்துல இருக்க பார்க்ல தான் இருக்கோம்”

“நாங்கன்னா யாரெல்லாம்?”

“நானும் ஆயுஷும்”

இரு நான் காரையெடுத்துட்டு வர்றேன் என்று சொன்னவள் போனை வைத்துவிட்டாள்.

இப்போ நித்ராவுக்கு என்ன செய்யவென்று தெரியாது பயத்தோடும் கலக்கத்தோடும் அவனது முகத்தையே பார்த்திருந்தாள்.

“என்ன நித்துமா?” என்று அவளது நாடிப்பிடித்துக் கேட்டவனைப் பார்த்து பரிதாபமாக முழித்தாள்.

அவளது நிலை உணர்ந்தவன் அவளது காதுமடல் முடிகளை வருடிக்கொடுத்து அவளது கன்னத்தைத் தட்டிப் பிடித்தான்.

அவனுக்குமே அவளது பயம் எதிர்காலம் குழந்தை என்று யோசிக்கிறாள் என்று புரியத்தான் செய்கிறது.ஆனால் அவளைப் பிரியத்தான் விரும்பவில்லை!

எப்படியாவது அவளோடு வாழ்ந்திடணும்னு என்கின்ற முயற்சியோடு அவள் முன்பு உட்கார்ந்திருக்கான்.

அவர்கள் இருவருமே அமைதியாக கைவிரல்களோடு கைவிரல் கோர்த்து அப்படியே உட்கார்ந்திருந்தனர்.

மித்ராவும் மோகனும் அவளைக் கூப்பிடக் காரில் வந்தனர்.

மோகன் ஆயுஷைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டான்.அவனது கண்கள் அவனை அதிர்ந்துப் பார்த்ததை அவனுமே உணர்ந்தான். அவனைவிட மித்ரா பார்த்து வேதனைப்பட்டாள்.

எப்படி இருந்த ஆயுஷா இது?என்றுதான் ஆச்சர்யமாக மோகன் பார்த்தான்.

கோட்டு இல்லாமல் சாதாரணமான சேர்ட் பேண்ட். ஒரு நார்மலான மிடில் கிளாஸோ இல்லைன்னா அப்பர் மிடில் கிளாஸ் பையன் மாதிரியான ட்ரஸ்ஸூம் லுக்கும் அதைப் பார்த்து தான் எல்லோருக்குமே அதிர்ச்சி.

இதுக்காகத்தான் அவள் அவனிடமிருந்து விலகுவதே. அதையும் மீறி அவன் அவளுக்காக வந்து நிக்கிறானே என்ன செய்வாள்!

மித்ரா வந்து “ஆயுஷ் சார் வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று அழைத்தாள்.

நித்ரா ஆயுஷிடமிருந்து எழுந்து “நீங்க டெல்லிக்கு இன்னைக்கே போயிடுங்க ஜீஜூ சத்தியமா என்னால உங்களை இப்படி பார்க்கமுடியல.உங்களை நான்தான் இப்படி மாத்திட்டேன்னு உள்ளுக்குள்ள புழுங்குறேன்.நீங்க உங்கப்பாக்கிட்டயே போயிடுங்க. உங்க குடும்பத்தோடு சந்தோசமா இருங்க ப்ளீஸ். மறுபடியும் மறுபடியும் என்னை அழவைக்காதிங்க. திரும்பத் திரும்ப என்னால் உங்களை பிரிஞ்சு விலக முடியல”என்று கைக்கூப்பி அழுதாள்.

அவன் அருகில் வரவும் வேண்டாம் ஜீஜூ நான் போறேன் என்று வேகமாகப் போய் காரில் ஏறிக்கொண்டாள்.

அங்கு பார்வையாளராக நின்றிருந்த இருவராலும் அதற்குமேல் ஒன்றும் சொல்லமுடியாது நித்ராவை அழைத்துக்கொண்டு வீடுவந்தனர்.

காரில் நித்ரா ஏறியதும் ஆயுஷின் மனது அப்படியொரு வேதனையில் துடித்தது.அந்த வேதனையை அவனது கண்கள் வெளிப்படுத்த நித்ரா அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு கார் டோரை அடைத்துக்கொண்டுக் கண்களை மூடிக்கொண்டாள்.